காரைகூட்டு ரோட்டில் சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்து - ராணிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது, காரை கூட்டு சாலை அருகே வந்த பொழுது ஆட்டோ ஓட்டுனர் சாலையை கடக்க முயற்சி செய்தார் அப்போது எதிர்பாராதவிதமாக சென்னையிலிருந்து சித்தூர் நோக்கிச் சென்ற லாரி ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில ஒரு பகுதி சேதமடைந்தது ஆட்டோ ஓட்டுனருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக தெரிந்ததும் ராணிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டு விபத்துக்குள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.
இது தொடர்பாக தற்போது ராணிப்பேட்டை காவல்துறையினர் இரண்டு வாகன ஓட்டுனர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் லாரி வருவது தெரியாது ஆட்டோ ஓட்டுனர் பாதையை கடக்க முயற்சி செய்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.