ஆந்திர மாநில அரசுப் பேருந்துகள் முன்அனுமதியின்றி வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படுவதாகத் துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷுக்கு புகார் சென்றுள்ளது.
இதைத்தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் மகான் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஆந்திர பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வேலூர் போக்குவரத்து துறை அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பேச்சுவார்த்தையில் வேலூர் போக்குவரத்து அதிகாரிகள் ஆந்திர போக்குவரத்து அதிகாரி களிடம் உரிய ஆவணங்களைக் காண்பித்து வாகனங்களை எடுத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.