வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 27,300 கொரோனா தடுப்பூசிகள் போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவலை அரசு தீவிரமாக கட்டுப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தடுப்பூசி இன்று 11:30 மணி அளவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாகிய வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைநகர் அரசு மருத்துவமனைகள் ஆன அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, வாலாஜா அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் நாளை சுமார் 27 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான முன்னேற்பாடுகள் அந்தந்த மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ் டன் புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.