வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆந்திர மாநில பேருந்துகள் இயக்கப்படுவதாகத் துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷுக்கு புகார் வந்ததையடுத்து கடந்த 13ஆம் தேதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி மற்றும் சக்திவேல் ஆகியோர் மக்கான் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்த 3 ஆந்திர பேருந்துகள் பறிமுதல் செய்தனர்.


இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆந்திராவுக்கு சென்ற தமிழக அரசுப் பேருந்துகள் 17 மற்றும் தனியார் பேருந்துகள் 7 என மொத்தமாக 24 பேருந்துகளை ஆந்திர போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


தற்போது ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் வேலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.அனைத்து பேருந்துகளும் நாளை மீட்கப்படும் என வேலூர் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.