கருணை அடிப்படையில் வேலை - நியமன ஆணை வழங்கிய ஆட்சியர் 
இராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் , உளியம்பாக்கம் கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து 07.01.2018 - ல் பணியிடை காலமான திரு . எஸ்.நாராயணன் என்பவரின் வாரிசுதாரர் ஆகிய அவரது மகள் திருமதி . ஜனனி என்பவருக்கு கருணை அடிப்படையில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு . ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் , இ.ஆ.ப , அவர்கள் வழங்கினார்கள் . உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி ) / திட்ட இயக்குநர் திருமதி . எஸ்.உமா , இ.ஆ.ப. , மற்றும் அலுவலக மேலாளர் திரு செல்வகுமார் ஆகியோர் இருந்தனர் .