மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதன் தெரு பகுதியிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மத்திய , மாநில அரசுகள் மின்சார துறையில் தனியார் பங்களிப்புடன் மின் உற்பத்தியில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியது .

இதனை கண்டித்து அந்த உத்தரவை உடனே வாபஸ் பெற கோரி தமிழக வாரிய பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ஜோதி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் மின்சார வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் அருள் , பெருமாள் , கோவிந்தன் , சிஐடியு கன்வீனர் கேசவன் , ரங்கன் உட்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் .