குடிநீர் வழங்க கோரி ஆட்சியர் வாகனகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைவருக்கும் அனைத்து குடும்பங்கலுக்கும் குடிநீர் கிடைக்கும் திட்டம் அமல்படுத்த மத்திய குழு வருகை தந்தது . அவர்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் உமா கலந்து கொண்டார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் வசதி வேண்டி மனு அளிக்க சென்றனர் . அவர் அதை உதாசினப்படுத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள் கூடுதல் ஆட்சியர் வாகனத்தின் முன்படுத்து வழிமறித்து தங்களின் எதிர்பை தெரிவித்தனர் . காவலர்கள் அவர்களை அப்புரபடுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.