கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு , ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது .
ஊஞ்சல் சேவையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர்கள் ஸ்ரீமுத்தாலம்மன் , ஸ்ரீபொன்னியம்மன் .


இதையொட்டி , மூலவர் முத்தலாம்மன் , கிராம தேவதை பொன்னியம்மனுக்கு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் , தீபாராதனை நடைபெற்றது . இரவு , கோயில் வளாகத்தில் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது . 

இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .