ரசாயன கழிவுகளை ஏற்றி சென்ற லாரி பறிமுதல் சார் ஆட்சியர் நடவடிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தோல் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன இந்த சூழ்நிலையில் ரசாயன தொழிற்சாலையில் இருந்து அனுமதியின்றி கழிவுநீரை ஏற்றிக்கொண்டு லாரி வெளியே செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட சார் ஆட்சியர் இளம்பகவத் அனுமதியின்றி கழிவுநீரை ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மேலும் லாரியில் உள்ள கழிவு நீரானது பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து சிப்காட் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்