ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே முடிதிருத்துவோர் நல சங்கம் மற்றும் மருத்துவ நல சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே முடிதிருத்தும் தொழிலாளி ராஜா என்பவர் ஆதிதிராவிட மக்களுக்கு முடி திருத்தம் செய்ததால் அந்த குடும்பத்தினரை ஊரைவிட்டு வெளியேற்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் லிங்கன் வரவேற்றார் கோபி பிரசன்னா பார்த்திபன் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் குமார் , சேகர் , குமரேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் , ரமேஷ் கண்ணா தமிழ் ஆகியோர் பங்கேற்று கிராம நிர்வாக அலுவலர் , ஊர் நாட்டான்மை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன் முடிவில் சங்க ஆலோசகர் செல்வகுமார் நன்றி கூறினார் . 0 1 2 விருப்பு வெறுப்பு கருத்து ஷேர் பகிர்