ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரமேஷ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராணிப்பேட்டை மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்டது. புதிய மாவட்டத்தின் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ஜெயலலிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதேபோல், சென்னை தலைமை செயலக செய்திப் பிரிவில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக (செய்தி) பணியாற்றி வந்த ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.