ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி அரக்கோணத்தில் நடைபெற்றது.இதில் ராணிப்பேட்டை , வாலாஜாபேட்டை , மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து 13 அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஏழு பெண்கள் அணியினர் , ஆறு ஆண்கள் அணியினர் என 64 வீரர்கள் கலந்து கொண்டனர் . அரக்கோணம் டேபிள் டென்னிஸ் பயிற்சி ஆசிரியர் சதீஷ் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றது .

மேலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டது இதில் பங்குபெற்ற வீரர்கள் உற்சாகமாக விளையாடினர் .