ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை சுவர்கள் மற்றும் சுரங்கப் பாதைகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது இந்த சுரங்கப் பாதையில் பல்வேறு தரப்பினர் தங்களை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு அனுமதியின்றி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்தோடு இணைந்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தனர்.

மேலும் அந்த இடத்தில் தற்போது புதியதாக வண்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது.