சில தினங்களாக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் எனக் குறிப்பிடப்பட்டு ஒரு இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது.

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் ? பரவும் வதந்தி .. !

இந்த குறுஞ்செய்தியை பலரும் சமூக வலைதளங்களிலும் பரப்பினர். உங்கள் பகுதியில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி கிடைக்கட்டும் அதிகம் பகிரவும் என குறிப்பிட்டு இதே இணையதள முகவரி பரப்பப்பட்டது.


இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது . இதுதொடர்பாக அரசுக்கு சொந்தமான பிஐபி ( Press information Bureau ) தனது ட்விட்டர் பதிவில் இந்த தகவல் முற்றிலும் போலியானது. இதுபோன்று அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என உறுதிபடுத்தியுள்ளது.