லட்சுமி நரசிம்மர் கோயிலில் பகல்பத்து 5 ம்நாள் உற்சவம்
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெருமாள் ஆலயங்களில் பகல் பத்து , ராப்பத்து உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம் . வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்களுக்கு பகல் பத்து உற்சவமும் , வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்கள் ராப்பத்து உற்சவமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் பகல் பத்து 5 ம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது . இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் மற்றும் ஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் சன்னிதியிலிருந்து மண்டபத்தில் எழுந்தருளினர்.

பக்தோசித பெருமாள் முன்பு நம்மாழ்வார் , திருமங்கை ஆழ்வார் , ராமானுஜர் உள்ளிட்ட ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யார்கள் எழுந்தருளியபின் கோயில் ஸ்தலத்தார்கள் பெரியாழ்வார் திருமொழி பாசுரங்களை சுவாமி முன்பு சேவித்தனர் .

இதைத்தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் கோயில் பிரகாரத்தில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . சோழிங்கர்