மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடுவதற்கான காரணம் என்ன ? 
ஆடியில் அம்மனும் , புரட்டாசியில் பெருமாளும் , மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என , மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர் . ஏனெனில் , ஆடியில் பலமுள்ள காற்று வீசும் . அப்படி வீசும் காற்று விஷக்காற்று என்பதால் , மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அம்மன் கோயில்களில் உள்ள கிருமிநாசினியான வேப்பிலையின் மணத்தை சுவாசிக்கும் போது , விஷக்காற்று முறியடிக்கப்படுவதுடன் , இயற்கையான ஆக்சிஜனும் கிடைக்கிறது . இதே புரட்டாசி மழைக்காலம் என்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே அப்போது கிடைக்கும் சத்து மிகுந்த காய்கறிகளைப் படைத்து பெருமாளை வழிபடுகிறார்கள் . இம்மாதத்தில் காய்கறிகளின் சத்தும் , துளசி தீர்த்தமும் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தைத் தருகிறது . இதே போல் மார்கழி மாதத்தின் அதிகாலையில் , ஓசோன் படலம் வழி , ஆரோக்கியமான , உடல் நலனைத் தரும் காற்று அதிகம் பூமியில் இறங்கும் . இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலமிட வேண்டும் என முன்னோர்கள் கூறினர் . நம் உடலில் 80 % ஆக்சிஜனும் 20 % கரியமில வாயுவும் இருக்க வேண்டும் . தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன் - டை - ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது . இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள் ,