ராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிளஸ்டன் புஷ்பராஜ் மரக்கன்று நட்டார் . 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வீசிய நிவர் புயல் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆல மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

தாளம் மரத்தின் அடிப்பகுதி ஒப்பேன் இயந்திரம் கொண்டு மீட்டு அதை அதே இடத்தில் மீண்டும் நட்டு பாதுகாத்து அனைவருக்கும் பயன் தரும் வகையில் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் . வேருடன் சாய்ந்த ஆலமரத்தை ஆட்சியர் கிளாஸ்ட்டன் புஷ்பராஜ் பார்வையிட்டார்.

அப்போது ஆலமரத்தின் வேர் பட்டுப் போய் இருந்ததால் மீண்டும் அதே இடத்தில் அந்த மரத்தின் அடிப்பகுதியை நாட்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதால் மரத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேப்ப மரக் கன்று நடும் என்று தெரிவித்தார் அதன்படி அந்த அகற்றப்பட்டு அதே இடத்தில் வேப்ப மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு வேப்ப மரக் கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார் மேலும் நான் ஆட்சியர் வளாகத்தில் அற்புத மூலிகையான வேப்ப மரக் கன்று நடும் வாய்ப்பு அமைந்ததாக தெரிவித்தார் .