ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் உள்ள உணவகங்கள் தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் போன்ற இடங்களில் 31-12-2020 அன்று இரவில் 2021 புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் மற்றும் இதர சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது காரணமாக 31-12-2020 மற்றும் 1-1-2021 ஆகிய நாட்களில் மேற்கண்ட இடங்களில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடுவது தடை செயல்படுவதாகவும் மதுவிலக்கு துறையினரிடம் அனுமதி பெற்று இயங்கி வரும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் 31 12 2020 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கேளிக்கைகள் நடைபெறாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தடையை மீறி செயல்படும் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.