ஆற்காடு கங்காதர இஸ் வரதராஜ பெருமாள் திருக்கோயில் சனி பெயர்ச்சியை ஒட்டி சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொப்புகானா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதீஸ்வரர் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இன்று சனி பெயர்ச்சியை ஒட்டி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வது காரணத்தினால் சனி பகவானுக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.