ஆற்காடு தோப்புகள் கோவிலில் இன்று முதல் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதீஸ்வரர் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் கடந்த பல வருடங்களாக காலை மற்றும் மதிய வேளை மட்டுமே இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த அன்னதானம் இன்று முதல் இரவு வேளையும் வழங்கப்படும் என கோவில் திருத்தேர் திருப்பணி குழு தலைவர் பொன் சரவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று முதல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி முதியோர் இல்லம் தலைவர் லட்சுமணன் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.