வேலூர் : ஆந்திராவிலிருந்து சரக்கு ஏற்றி வந்த ஈச்சர் வேன் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர் . 
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கொத்தூர் என்ற இடத்திற்கு தனியார் கோழி பண்ணைக்கு கல் நடுவதற்காக ஆந்திர மாநிலம் வீ கோட்டா பகுதியிலிருந்து கருங்கல் கம்பங்களை ஏற்றிக் கொண்டு லாரி வந்துக் கொண்டிருந்தது . 

இந்த லாரி பள்ளிகொண்டா அடுத்த எரிக்கொள்ளை என்ற இடத்தில் வந்துக் கொண்டிருந்தத போது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களான கோவிந்தராஜ் ( 35 ) , வரதப்பன் ( 40 ) , ராமன் ( 30 ) , ஆகிய மூன்று பேரும் கல் கம்பங்களுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . 

தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் ஈச்சர் வேனில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட 4 பேர் படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .