ஆற்காட்டில் ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். 
தமிழகத்தில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளுக்கும் உண்டான ஓட்டு பதிவு இயந்திரங்களை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கண்ணமங்கலம் கூற்றோடு அருகே உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்து பாதுகாப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது .

இந்த இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .