ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான , 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டுள்ளது . 
திருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதத்தில் தரிசனம் செய்வதற்கான , 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது . தேவஸ்தான இணையத்தில் காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவு துவங்குகிறது . 

நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . 

முன்பதிவு செய்யாத பக்தர்கள் திருமலைக்கு வரவேண்டாமெனத் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது .