அரக்கோணம் பூனியனுக்கு உட்பட்ட காவனூர் கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி கதிரவன் (36) என்பவரை பாம்பு திடீரென கடித்தது.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அங்கிருந்த பாம்பு திடீரென கதிரவனை கடித்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாம்பு கடித்ததால் கதிரவனுக்கு உடலில் வலி அதிகமாக இருந்ததால், அவருக்கு மேல்சிகிச்சை அளிக்க வேண்டி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பாம்பின் விஷம் கதிரவனின் உடலில் பரவி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.