ராணிப்பேட்டையில் லோடு ஆட்டோ மோதி விவசாயி பலி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்வெள்ளம் கிராமத்தை சேர்ந்த மணி (65), சோளிங்கர் அம்மூர் சாலையில், தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மோதி படுகாயமடைந்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மணி, வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மணி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.