ராணிப்பேட்டை மாவட்டம் காரைக்கூட்ரோடு பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த வாகன தணிக்கையில் தொழிற்சாலைகளுக்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் மேக்ஸி கப் வேன்கள் மீது அதிக அளவு கவனம் செலுத்தப்பட்டது.

வாகன தணிக்கையில், வருடாந்திர வரி செலுத்தாத நான்கு மேக்ஸி கப் வேன்கள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் பறிமுதல் செய்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், வருடாந்திர வரி செலுத்தி, வாகனங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் அறிவுறுத்தினார்.