சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் உள்ள மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், மின்சார கம்பிகளை தொடுவதை தவிர்க்கவும், கால்நடைகளை கட்டி வைக்கவும், பழைய வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் செல்லாமல் இருப்பது நல்லது. மழைநீர் தேங்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.