ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் கார்த்திகை பெருந்திருவிழா நவம்பர் 17-ம் தேதி முதல் ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கோயிலுக்கு வரும் வாகனங்கள் மற்றும் அங்கு அமையும் கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமத்திற்கு நவம்பர் 15-ம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு சோளிங்கர் நகராட்சி அலுவகத்தில் பொது ஏலம் விடப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், நவம்பர் 14-ம் தேதிக்குள் நகராட்சி அலுவகத்தில் பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஏலத்தில் அதிக தொகை தருபவர்களுக்கு உரிமம் வழங்கப்படும்.
ஏலத்தில் பெறப்படும் தொகை கோயில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.