ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இந்த விழா 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (18-ந்தேதி) நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணிய திரிசதியாகம், சிறப்பு அலங்காரம், மாலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (19-ந்தேதி) திருக்கல்யாணம் உற்சவ விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி-தெய்வானை ஆகியோருக்கு திருமணம் நடத்தப்படும். இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம்.

விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பால முருகனடிமை சுவாமிகள் மற்றும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.