வேலுார் மின் பகிர்மான வட்டம் சோளிங்கர் கோட்டத்தை சேர்ந்த பனப்பாக்கம், பெருவளையம் துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (22ம் தேதி) நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பனப்பாக்கம், மேல புலம், நெடும்புலி, ஜாகீர்தண்டலம், ரெட்டிவலம், அக வலம், தென்மாம்பாக்கம், பெருவளையம், சிறுவளையம், உளியநல்லுார், கர்ணாவூர், துறையூர், பள்ளிப்பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர் தங்கள் வீடுகளில் உள்ள மின் சாதனங்களை நிறுத்தி வைத்து, மின் பராமரிப்பு பணிகள் முடிந்த பின் மீண்டும் இணைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.