ராணிப்பேட்டை மாவட்டம் புதூரை சேர்ந்த காவலர் இளங்கோ (35). இவர் ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளங்கோ, பெருவளையம் அருகே சாலை விரிவாக்க பணிகளுக்காக பள்ளம் தோண்டிய மண், சாலை ஓரத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இருட்டில் மண்மேட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த இளங்கோ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.