ராணிப்பேட்டை மாவட்டம், நரசிங்கபுரம் வடகால் கிராமம், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தம்மாள்(70). இவர் நேற்று வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொதித்து கொண்டிருந்த எண்ணெய் சட்டியின் மீது தவறி விழுந்தார். இதில் முத்தம்மாள் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முத்தம்மாளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொதிக்கும் எண்ணெய்யில் விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் குறித்து நரசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.