ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (55). இவரது உறவினரான மூதாட்டி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் சுந்தர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தபடி சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில் சுந்தர் பலத்த தீ காயமடைந்தார்.

அவரை அருகில் உள்ளோர் மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று முன்தினம் சுந்தர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.