ராணிப்பேட்டை உளியநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா உளியநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனால், அந்த வழியே செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணம் செய்து வந்தனர்.
இந்த சூழலில், நெமிலி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தலைமையில் வழிப்பறி சம்பவங்களை தடுக்க ஆறு இடங்களில் பொதுமக்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமரா இன்று இரவு பொருத்தப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.