ராணிப்பேட்டை நவல்பூரில் டீ கடை ஒன்று உள்ளது. இந்த டீ கடையில் நேற்று மாலை வழக்கம் போல் டீவிற்பனை நடந்து வந்தது.

இதன் உரிமையாளர் அவசர வேலையாக வெளியே சென்றுவிட அந்த நேரத்தில் அவரின் மனைவி தனது குழந்தைகளுடன் டீ கடையில் இருந்துள்ளார்.

அப்போது கடையில் உள்ள மோட்டார் பம்ப் அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று பதுங்குவதை பார்த்து அவரின் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் தனது குழந்தைகளுடன் வெளியே வந்து அங்கு டீ குடிக்க வந்தவர்களிடம் கூறினார். - அவர்களில் சிலர் அலறி அடித்துக்கொண்டு எஸ்கேப் ஆகினர். இதையடுத்து, பாம்பு பிடிக்கும் ஸ்னேக் கார்த்திக் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அங்கு வந்த அவர், பாம்பை லாவகமாக மீட்டு பையில் போட்டு கட்டினார்.

பிறகு அதை அம்மூர் காப்புக்காடு பகுதியில் விடுவிக்க எடுத்துச் சென்றார்.