ராணிப்பேட்டை நகர துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை, செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ராணிப்பேட்டை நகரம், ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

இந்த பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அவர் கூறியுள்ளார்.