சொந்த வீடு கட்ட துவரம் பருப்பை எப்படி தானம் செய்ய வேண்டும்? சொந்த வீடும், துவரம் பருப்பும்
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் பல முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால், அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. அப்படி சொந்த வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒரு எளிய பரிகாரம் இருக்கிறது. அது துவரம் பருப்பு பரிகாரம்.

இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு துவரம் பருப்பு மட்டும் தான் தேவை. நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பு போதும். வாடகை வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் மாதா மாதம் வாடகை தர வேண்டும். அந்த வாடகை பணத்தை தான் நாம் இந்த துவரம் பருப்பில் வைத்து கொடுக்க வேண்டும்.

திங்கட்கிழமை அன்று ஒரு கவரில் நீங்கள் எவ்வளவு வாடகை தர வேண்டுமோ அதை போட்டு துவரம் பருப்பு டப்பாவில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரை வரும் நேரத்தில் இந்த வாடகை பணத்தை உங்கள் வீட்டு ஹவுஸ் ஓனரிடம் தந்து விடுங்கள். அப்படி உங்களுக்கு ஹேரை பார்த்து கொடுக்க முடியவில்லை எனில் காலை முதல் மதியம் வரை இருக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் இந்த பணத்தை கொடுக்கலாம்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய சொந்த வீடு கனவுகள் நினைவாக கூடிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்காக எந்த ஒரு முயற்சி தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றியின் தான் முடியும். அது மட்டும் இன்றி அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து சொந்த வீட்டில் வாழும் யோகத்தை பெறலாம்.