பொன்னையில் நேற்று டிஎஸ்பி பழனி மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமையில் பொன்னை புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று பொன்னைப்புதூர் பகுதியில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஓட்டேரி ஏரியில் கள்ளச் சாராயம் விற்றுக்கொண்டிருந்த பொன்னை புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பச்சையப்பன் (33) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 15 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், பச்சையப்பனை சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி அரக்கோணம் சப்-ஜெயிலில் அடைத்தனர்.