வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த குத்தித் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 35). கடந்த 26-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சின்னஉப்புப்பேட்டைக்கு சொந்த அலுவல் காரணமாக குமரேசன் மோட்டார்சைக்கிளில் வந்துள்ளார். அப்போது தனது மனைவியையும் உடன் அழைத்து வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் 27-ந் தேதி மாலை சொந்த ஊருக்கு மோட்டார்சைக்கிள் திரும்பி சென்றுள்ளனர்.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது பின்னால் வந்த கார், குமரேசன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சத்யா படுகாயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் சத்யாவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.