குறள் : 1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
மு.வ உரை :
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
கலைஞர் உரை :
நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை :
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.
Kural 1209
Viliyumen Innuyir Verallam Enpaar
Aliyinmai Aatra Ninaindhu
Explanation :
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.
Horoscope Today: Astrological prediction for August 21, 2023
இன்றைய ராசிப்பலன் - 21.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
21-08-2023, ஆவணி 04, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.01 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம். நாள் முழுவதும் பிரபலாரிஷ்ட யோகம். நாக பஞ்சமி. கருட பஞ்சமி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் -21.08.2023 | Today rasi palan - 21.08.2023
மேஷம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கப் பெறும்.
ரிஷபம்
இன்று எதிர்பாராத பிரச்சினைகள் இல்லம் தேடி வரலாம். வீட்டு பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பெரியவர்களின் நன்மதிப்பை பெற பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு உடல் அசதி மந்த நிலை ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபகரமான பலன்கள் கிட்டும்.
கடகம்
இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
சிம்மம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
மகரம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கும்பம்
இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். உங்கள் ராசிக்கு மாலை 05.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மாலை நேரத்திற்கு பிறகு பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு மாலை 05.30 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வெளிப் பயணங்களில் கவனம் தேவை.