குறள் : 1206

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்

உற்றநாள் உள்ள உளேன்.


மு.வ உரை :

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்ளூ வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

கலைஞர் உரை :

நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?.

சாலமன் பாப்பையா உரை :

அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?.


Kural 1206

Matriyaan Ennulen Manno Avaroti Yaan

Utranaal Ulla Ulen

Explanation :

I live by remembering my (former) intercourse with him; if it were not so how could I live ?


Horoscope Today: Astrological prediction for August 18, 2023


இன்றைய ராசிப்பலன் - 18.08.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

18-08-2023, ஆவணி 01, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 08.02 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூரம் நட்சத்திரம் இரவு 10.57 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். சந்திர தரிசன. (வாக்கியம்) 

இராகு காலம் | Indraya Raagu Kalam

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00  


இன்றைய ராசிப்பலன் - 18.08.2023 | Today rasi palan – 18.08.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

ரிஷபம்

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்

இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். 

கடகம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். வேலையில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் வழியில் உதவி கிட்டும்.

சிம்மம்

இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் ரீதியாக இருந்த எதிர்ப்புகள் குறையும்.

விருச்சிகம்

இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்

இன்று உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்க கூடிய நாளாக இந்த நாள் அமையும். மிக கடினமான காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளால் லாபகரமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026