ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடையை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் வசித்து வந்த வள்ளி (45) என்பவர், 12-ம் வகுப்பு முடித்த பிறகு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். இவர், சிகிச்சை அளிக்க முறையான மருத்துவ பயிற்சி பெற்றவர் அல்ல.

இது குறித்த புகாரின் அடிப்படையில், மருத்துவ மற்றும் ஊரகத்துறை இணை இயக்குநர் விஜயா முரளி தலைமையிலான மருத்துவ குழு, வள்ளி வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த வளள்ளியை பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வள்ளி முறையான மருத்துவ பயிற்சி பெற்றவர் அல்ல என்றும், வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் உறுதியானது.

இதையடுத்து, மருத்துவ குழுவினர் வழங்கிய புகாரின் அடிப்படையில், ராணிப்பேட்டை போலீஸார், வளள்ளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வள்ளி, போலி மருத்துவர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

வள்ளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள், வள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு வரவேற்றுள்ளனர்.