ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் கிரேட் நகர் பகுதியில் வசித்து வந்த ராஜஸ்ரீ (23) என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்ரீ பி.காம் படித்து விட்டு வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்தார். கடந்த 3 நாட்களாக சரிவர சாப்பிடாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாயார் அமுதா காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் உள்ள பூஜை அறையில் சேலையால் ராஜஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீடு திரும்பிய தாய் அமுதா, மகள் ராஜஸ்ரீ இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் அங்கு வந்து ராஜஸ்ரீ உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்ரீயின் மரணம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் உயிரிழந்த ராஜஸ்ரீயின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.