வேலுார் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த தஸ்தகீர், 33, காட்பாடி சிக்கன் கடை ஊழியர். இவரது மனைவி ஷாயின், 25, மகன்கள் சுபான், 5, இப்ராஹிம், 3. நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், ஆற்காட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, வேலுாரில் இருந்து ஹோண்டா பைக்கில் சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு புதிய மேம்பாலம் அருகே, சாலையை கடக்கும் போது, சென்னையில் இருந்து வேலுார் சென்ற தனியார் பஸ், பைக்கில் மோதியது. ஷாயின் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். தஸ்தகீர், சுபான், இப்ராஹிம் மூவரும் படுகாயமடைந்து, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சுபான் இறந்து விட்டது தெரிந்தது. தஸ்தகீர், இப்ராஹிம் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆற்காடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்த விபத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஸ்தகீர், ஷாயின் குடும்பத்தினர் மீது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.