ராணிப்பேட்டையில் திருட்டு
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த ஜனகாபுரம் கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி (வயது 64) என்பவரது வீட்டில் திருட்டு நடந்துள்ளது.

சுப்பிரமணி தனது மகளைப் பார்க்க சென்னை சென்றிருந்தார். இந்த சமயத்தில் திருட்டு நடந்துள்ளது. திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவை உடைத்து, அதில் இருந்த 14 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், இரண்டு சிலிண்டர்கள், ஒரு டி.வி. மற்றும் ரூ.20 ஆயிரம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.