குறள் : 1167

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

மு.வ உரை :

காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லைளூ நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

கலைஞர் உரை :

நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வௌ;ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்

சாலமன் பாப்பையா உரை :

காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

Kural 1167

Kaamak Katumpunal Neendhik Karaikaanen
Yaamaththum Yaane Ulen

Explanation :

I have swam across the terrible flood of lust but have not seen its shore; even at midnight I am alone; still I live.


Horoscope Today: Astrological prediction for July 10, 2023

இன்றைய ராசிப்பலன் - 10.07.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


10-07-2023, ஆனி 25, திங்கட்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.44 வரை பின்பு தேய்பிறை நவமி. ரேவதி நட்சத்திரம் மாலை 06.59 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் - 10.07.2023 | Today rasi palan - 10.07.2023

மேஷம்

இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை அளிக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும்.

மிதுனம்

இன்று நீங்கள் வேலையில் சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். திடீர் தனவரவு ஏற்படும். பொன் பொருள் சேரும்.

கடகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் உறவினர்களின் உதவியால் நெருக்கடிகள் சற்று குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

துலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் இருக்காது. வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். திடீர் பயணம் உண்டாகும். கடன்கள் குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பணநெருக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்தநிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகபலன் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

மீனம்

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபார ரீதியாக உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.



கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026