👉 1965ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர் மனிந்தர் சிங் (Maninder Singh) புனேயில் பிறந்தார்.


👉 1955ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 

👉 1983ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி பயனியர் 10(Pionner- 10), சூரியக் குடும்பத்தை தாண்டிய முதலாவது விண்கலம் (spacecraft) ஆனது. 


பிறந்த நாள் :-


பான் கி மூன்

👉 ஐ.நா.வின் 8வது பொதுச் செயலாளரான பான் கி மூன் 1944ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கொரியாவில் பிறந்தார்.

👉 இவர் ஐ.நா.வின் பொதுச் செயலாளராக 2007ஆம் ஆண்டு பதவியேற்றார். அடுத்தடுத்து இரண்டு முறை ஐ.நா. பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ள இவரின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் நிறைவடைந்தது. 

👉 தென்கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன்முதலாக பணியில் சேர்ந்த இவர் கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

👉 பத்து ஆண்டுகளாக ஐ.நா.வை வழிநடத்திய இவர் தனது 74வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 


ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்

✍ கோட்பாட்டு இயற்பியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் (James Clerk Maxwell) 1831ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்கில் பிறந்தார்.

✍ இவர் மின்காந்தவியல் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முதன்முதலில் மின்காந்த அலைகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பரிசோதனை மூலம் நிரூபித்தார். மேலும் 1865-ல் மின்காந்தவியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

✍ வாயுக்களின் இயக்கக் கோட்பாட்டை (kinetic theory of gases) விளக்குவதற்காக புள்ளியியல் முறையை உருவாக்கினார். இது Maxwell-Boltzmann distribution எனக் குறிப்பிடப்படுகிறது.

✍ தன் வாழ்நாளின் இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், தனது 48வது வயதில் (1879) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார்.

1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது.

1514 – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.

1525 – கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார்.

1625 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் புரிந்தார்.

1774 – அடிமைகள் இறக்குமதியை றோட் தீவு தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியைத் தடை செய்த முதல் நாடு இதுவாகும்.

1871 – லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.

1881 – ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிக்கட்டியுடன் மோதி மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

1886 – பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.

1917 – முதலாம் உலகப் போர்: இலண்டன் நகர் மீது செருமனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.

1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.

1931 – இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1934 – இட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை: செருமானியத் தாங்கிகள் பிரித்தானியப் படைகளைத் தாக்கி 14 பிரித்தானியத் தாங்கிகளை அழித்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனி வி-1 பறக்கும் வெடிகுண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.

1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.

1952 – சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.

1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1977 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையாளி யேம்சு ரே மீண்டும் கைது செய்யப்பட்டான்.

1981 – லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளை சுட்டுத் தீர்த்தான்.

1982 – சவூதி அரேபியாவின் மன்னராக பாகுத் முடிசூடினார்.

1983 – பயனியர் 10 நெப்டியூனின் சுற்றுவட்டத்தை எட்டி, மத்திய சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை எட்டியது.

2000 – தென்கொரியாவின் அரசுத்தலைவர் கிம் டாய் ஜுங், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லை வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

2002 – ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியது.

2006 – நியூ ஹரைசன்ஸ் விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் “132524 ஏபிஎல்” என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.

2007 – திருகோணமலையில் “மேர்சி கோப்ஸ்” என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.

2010 – 25143 இத்தொகாவா என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளுடன் அயபூசா என்ற சப்பானிய விண்கலம் பூமி திரும்பியது.

2012 – ஈராக்கின் பல பாகங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள்


40 – அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமை இராணுவத் தளபதி (இ. 93)

1773 – தாமசு யங், ஆங்கிலேய இயற்பியலாளர், உளவியலாளர் (இ. 1829)

1831 – ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், இசுக்கொட்டிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1879)

1865 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞர் (இ. 1939)

1870 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய உயிரியலாளர் (இ. 1961)

1903 – சஞ்சயன், மலையால எழுத்தாளர் (இ. 1943)

1905 – ஜேம்ஸ் இரத்தினம், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், நூலாசிரியர் (இ. 1988)

1909 – ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, கேரளத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1998)

1911 – லூயிஸ் வால்டர் அல்வாரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)

1917 – அகுஸ்டோ ரொவ பாஸ்டோ, பராகுவை புதின எழுத்தாளர் (இ. 2005)

1928 – ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர் (இ. 2015)

1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996)

1935 – சமாக் சுந்தரவேஜ், தாய்லாந்தின் 25வது பிரதமர் (இ. 2009)

1944 – பான் கி மூன், தென்கொரிய அரசியல்வாதி, ஐநாவின் 8வது பொதுச் செயலர்

1946 – பவுல் மோட்ரிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியலாளர்

1946 – செர் பகதூர் தேவ்பா, நேபாளத்தின் 32-வது பிரதமர்

1959 – கிளாசு யோகன்னிசு, உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர்

1966 – கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலாளர்

1981 – கிறிஸ் எவன்ஸ், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1987 – ஜி. வி. பிரகாஷ் குமார், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

இன்றைய தின இறப்புகள்


1231 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195)

1861 – ஹென்றி கிரே, ஆங்கிலேய உடல்கூறியலாளர், மருத்துவர் (பி. 1827)

1931 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர் (பி. 1851)

1960 – கார்ல் கீனான் சீபெர்ட், அமெரிக்க வானியலாளர் (பி. 1911)

1969 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)

1969 – பிரகலாத் கேசவ் அத்ரே, இந்திய ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1898)

1973 – ராம்நாத் சோப்ரா, இந்திய மருந்தியலாளர் (பி. 1882)

1987 – வி. கணபதி அய்யர், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1906)

1988 – க. வெள்ளைவாரணனார், தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (பி. 1917)

1998 – லூசியோ கோஸ்தா, பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1902)

2007 – இராமச்சந்திர காந்தி, இந்திய மெய்யியலாளர் (பி. 1937)

2012 – மெஹ்தி அசன், பாக்கித்தானிய கசல் பாடகர் (பி. 1927)

இன்றைய தின சிறப்பு நாள்

கண்டுபிடிப்பாளர் நாள் (அங்கேரி)

மாவீரர் நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)