ராணிப்பேட்டை ஆர். ஆர். ரோடு, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி (வயது 51). இவரது மகன் வருண்ராஜ் (29), டிரைவரை பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் நேற்று மாலை ராணிப்பேட்டை பாலாறு மேம்பாலத்திற்கு அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மதுவை வாங்கிக்கொண்டு சென்ற போது அவரை அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் முன்விரோதம் காரணமாக வழிமறித்து ஆபாசமாக திட்டியுள்ளனர். 

மேலும் தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் வருண்ராஜ் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருண்ராஜ் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜய், சாமுவேல், சாந்தகுமார், சந்தோஷ் ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர்.