ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட், சங்க தலைவர் சந்தோஷ் காந்தி, செயலாளர் செல்வகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது உட்பட்ட வீரர்களுக்கான மாவட்ட தேர்வு முகாம் தேர்வு வருகிற 25-ந் தேதி காலை 7.30 மணிக்கு ராணிப்பேட்டை இ.ஐ.டி.பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

தேர்வு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் வயது வரம்பு -1.9.2009 தேதிக்கு மேல் பிறந்தவராக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை இ.ஐ.டி.பாரி மைதானத்தில், தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பெற்று பூர்த்தி செய்து சங்க இணை செயலாளர் பாஸ்கரிடம் (செல் -9842326373) வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.