குறள் : 1146

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.


மு.வ உரை :

காதலரைக் கண்டது ஒருநாள் தான் அதனால் உண்டாகிய அலரோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

கலைஞர் உரை :

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் கிரகணம் எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது

சாலமன் பாப்பையா உரை :

நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!


Kural 1146

Kantadhu Mannum Orunaal Alarmannum

Thingalaip Paampukon Tatru

Explanation :

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.


Horoscope Today: Astrological prediction for June 19, 2023


இன்றைய ராசிப்பலன் - 19.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

19-06-2023, ஆனி 04, திங்கட்கிழமை, பிரதமை திதி பகல் 11.26 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 08.10 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் இரவு 08.10 வரை பின்பு அமிர்தயோகம். சந்திர தரிசனம். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.


இன்றைய ராசிப்பலன் - 19.06.2023 | Today rasi palan - 19.06.2023

மேஷம்

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மன உளைச்சலை கொடுக்கும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும்.

கன்னி

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

தனுசு

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

மகரம்

இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். 

மீனம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகளோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்படும்.


கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026